‘ராஜ பார்வை’, ‘காசி’ வரிசையில் பரவலான வரவேற்பையும் இனிமையான பாடல்களையும் கொண்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திரைப்படம் ‘குக்கூ’. திரைப்படத்தின் வெற்றி என்ற அடிப்படையில் ‘ராஜ பார்வை’, ‘காசி’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் இடைப்பட்ட இடத்தைத்தான் ‘குக்கூ’ திரைப்படம் பெற்றது. ஏனெனில், ‘குக்கூ’ திரைப்படத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் ஒப்பீட்டளவில் முந்தைய திரைப்படங்களைவிட சற்றே குறைவு என்பதே. அந்தக் காரணம் தான், ‘குக்கூ’ திரைப்படத்தின் உயர் தரத்தின் ஒரு கூறாகவும் அமைகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவில்லையே என்ற எண்ணம் எழாதவாறு அழகான, இனிமையான பாடல்கள் மற்றும் இசையை அளித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு முதல் பத்தியிலேயே நன்றி தெரிவிக்கிறோம். ஏனென்றால், இத்திரைப்படத்தில் முதல் மரியாதைக்கு உரியவர் அவர் என்பது எள்ளளவும் மிகையில்லாத உண்மை.
‘குக்கூ’ திரைப்படத்தில் நாயகன், நாயகி மற்றும் பெரும்பாலான துணைக் கதாப்பாத்திரங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள்தான். ஆனால், தனக்குப் பார்வை இல்லையே என ஒருவர்கூட சோக கீதம் இசைக்கவில்லை; எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியவில்லையே என்பது மாதிரியான விரக்தியான வசனங்கள் பேசவில்லை. மாறாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்க்கின்றனர்; மிக இயல்பாகவே திரைப்படக் காட்சிகளைக் கலாய்க்கின்றனர்; உடன் இருக்கின்ற நண்பர்களிடம் கோபப்படுகின்றனர்; இடத்தை மாற்றிச் சொல்லி ஏமாற்றுகின்றனர்; சண்டை போட்டு, மன்னிப்புக் கேட்டு சமாதானம் அடைகின்றனர். ஆக, அவர்களின் வாழ்வியல் இருண்ட உலகமோ, புனிதர்கள் மட்டுமே வாழும் பொன்னுலகமோ அல்ல; இயல்பான உலகம் தான் என்பதைக் காட்டிய முதல் திரைப்படம் ‘குக்கூ’ தான் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த வகையில், இயக்குனர் ராஜூ முருகன் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்.
பெரும்பாலான திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் படித்தவர்களாக, படித்துக்கொண்டு இருப்பவர்களாகக் காட்டுவதில்லை. ஆனால், இத்திரைப்படத்தில் நாயகி மட்டுமின்றி பல பார்வை மாற்றுத்திறனாளிகள் படித்துக்கொண்டு இருப்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மேலும், தன்னார்வலர்களான வாசிப்பாளர்கள் பாடங்களை வாசித்துக் காட்டுவது, செய்முறைப் பதிவேடுகள் எழுதித் தருவது போன்ற நடைமுறைகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கல்லூரிப் பாடங்கள் மட்டுமின்றி, பிற நூல்களையும் தன்னார்வலர்கள் உதவியுடன் பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கின்றனர் என்பதும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பொதுச் சமூகம் இதுவரை அறிந்திராத இவற்றை முதன்முதலாக திரையில் காட்டியமைக்கு இயக்குனர் ராஜூ முருகன் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
நாயகன் மின்சார இரயிலில் சிறு பொருட்களை விற்கும் ஒரு நடைபாதை வியாபாரி மற்றும் பகுதி நேர மேடைப் பாடகன். நாயகி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி. மேலும், நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் என இன்னும் பல மாற்றுத்திறனாளிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதில் நாயகன் மற்றும் நாயகியைத் தவிர பிற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உண்மையான மாற்றுத்திறனாளிகள் என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சம். ஆனால், அவர்களில் ஒருவர்கூட குறைப்பார்வை கொண்டவராக இல்லாமல், அனைவரையுமே முழுமையான பார்வையற்றவர்களாகக் காட்டியிருப்பது இதுவும் இன்னொரு திரைப்படம் தான் என்பதைக் காட்டுகிறது.
ஆக, பார்வை மாற்றுத்திறனாளி என்பவருக்கு துளியளவும் பார்வை இருக்கக்கூடாது என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயக்குனரும் அந்த நிலையிலேயே தேங்கிவிட்டதால், ‘குக்கூ’ திரைப்படமும் ‘காசி’, ‘ராஜ பார்வை’, ‘மேஜர் சந்திரகாந்த்’ என பின்னோக்கித்தான் பயணிக்கிறது. ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி பிச்சைக்காரராக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில், "நல்லாத்தான இருக்கற? ஏன் பிச்சை எடுக்கற?" என்று ஒருவர் கேட்பார். அதற்குக் கவுண்டமணி, "நீ போடற அம்பது பைசாவுக்காக எனக்கு கை, காலு, கண்ணு எதுவுமே இருக்கக்கூடாதா?" என்று கேட்பார். இதே கேள்வியைத் தான் இத்திரைப்பட இயக்குனரிடம் நாமும் கேட்கிறோம். வாசனை மூலமாக அடையாளம் காண்பது, கட்டித் தழுவிப் பார்த்து அடையாளம் கொள்வது போன்றவை எல்லாம் இத்திரைப்படத்தின் திருஷ்டிப் பரிகாரங்கள். அவை குறித்துப் பேசாமல் கடந்து விடுவதே நல்லது.
முன்னதாக, ‘நன்றி சமர்த்தனம் அறக்கட்டளை’ என்ற பெயருடன்தான் திரைப்படம் தொடங்குகிறது. தன்னார்வலர்கள் வாசித்துக் காட்டும் இடம், நாயகி தங்கிப் படிக்கும் விடுதி, நாயகன் தங்கியிருக்கும் இடம், விற்பனைக்கான பொருட்களைக் கொள்முதல் செய்யும் இடம் அனைத்தையும் யதார்த்தமாகக் காட்டியிருந்தாலும், அவை எந்த இடங்கள் என்பதை வாய்மொழியாகவோ, சப்-டைட்டில் முறையிலோ குறிப்பிடவில்லை என்பது மிகப்பெரிய குறை. ஏனெனில், இவை ஒவ்வொன்றும் இத்திரைப்படத்தில்தான் முதல் முறையாக காட்டப்படுகின்றன என்பதால் அவை குறித்த அனுபவம் பொதுச் சமூகத்திற்கு இருக்காது. அதைச் செய்யாததால், அந்தக் காட்சிகள் முழுமையான தாக்கத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை.
விகடன் முத்திரை, இயக்குனர் லிங்குசாமி போன்றோரைத் திரையில் காட்டும்போதே பார்வையாளர்களுக்கு அடையாளம் தெரிந்துவிடும். ஆனாலும், இயக்குனர் ராஜூ முருகன் தனது குரலிலும் விகடன், லிங்குசாமி போன்ற பெயர்களைப் பதிவு செய்கிறார். இதே போன்ற அக்கறை, பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான இடங்களைக் காட்டும்போதும் இருந்திருக்கலாமே! பார்வை மாற்றுத்திறனாளிகளின் பின்புலத்தைப் பொதுச் சமூகம் புரிந்துகொள்ளும் அளவிற்குக் காட்டுவதற்கான அரிய வாய்ப்பை இயக்குனர் தவறவிட்டாரே? பார்வை மாற்றுத்திறனாளிகளை அவர்களது பெற்றோருடன், குழந்தைகளுடன், பணிபுரியும் சூழல்களைக் காட்டுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
ஏனென்றால், இன்றைக்கும்கூட பார்வை மாற்றுத்திறனாளிகளின் பள்ளிகள், விடுதிகளுக்கு வருகின்ற பொதுமக்கள், "இவர்களுக்கு பெற்றோர் இருக்கின்றனரா?”, “இவர்கள் வீட்டிற்குச் செல்வார்களா?" என்பன போன்ற கேள்விகளைத் தவறாமல் கேட்கின்றனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் இருப்பதை பொதுச் சமூகம் உணர மறுக்கிறது! திரைப்படங்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் பின்புலத்தைக் காட்டுவதில் அக்கறை கொள்வதில்லை; தனித்தனியான மனிதர்களாகவே காட்டுகின்றன. இதன் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகளின் திருமணம், குழந்தைகள் என்பன போன்றவற்றில் பொதுச் சமூகம் அறியாமையுடனேயே இருக்கிறது.
தேவர் பிலிம்ஸ், இராம நாராயணன் திரைப்படங்களில், "இந்த விலங்குகளுக்கு இருக்கற பாசம், நன்றி உணர்ச்சி கூட மனுசங்களுக்கு இல்லயே!", "வாயில்லாத இந்த ஜீவன்களுக்கு எவ்வளவு அறிவு, திறமை பாருங்க!" என்பன மாதிரியான வியந்து பாராட்டும், அனுதாபம் காட்டும் வசனங்கள் தவறாமல் இடம்பெறும். பார்வை மாற்றுத்திறனாளிகளையும் படைப்பாளிகள் அவ்விதம்தான் கருதுகின்றனர்; கையாளுகின்றனர். விலங்குகளை வைத்து விந்தைகள் புரியும் சாகச மனநிலையில்தான் படைப்பாளிகள் சிந்திக்கின்றனர். ஆரம்பத்தில் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாகத் தொடங்கிய இயக்குனர் ராஜூ முருகன், போகப்போக சாகச மனநிலைக்குச் சென்றுவிட்டது ‘குக்கூ’ திரைப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு. ஆக, வடிவேலு பாணியில் மிகச் சுருக்கமாகச் சொன்னால், ‘ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உன்னோட ஃபினிஷிங் சரியில்லயேப்பா!’
ஒரு முக்கிய அறிவிப்பு! அடுத்த பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவு பெறவிருக்கிறது. பார்வையை இழந்த பின்னரும் அசாத்தியமான முறையில் பழிவாங்கும் ‘இரவு சூரியன்’, ‘ரெண்டு’, ‘தாண்டவம்’ மற்றும் குரலை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட முக்கோணக் காதல் கதைகள் ‘நிலவே முகம் காட்டு’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’ போன்ற திரைப்படங்களை இந்தத் தொடரில் எடுத்துக்கொள்ள இயலவில்லை. சரி, நிறைவுப் பகுதியாக இடம்பெறவிருக்கும் திரைப்படம் எது?
இரு ஆசிரியர்களுக்கு இடையிலான உரையாடல் பின்வருமாறு,
"ஏற்கெனவே கண் பார்வை மோசமா இருக்கு. அப்புறமும் அந்த பல்ப உத்துப் பாத்துக்கிட்டு என்ன பண்றீங்க?"
"லைட். இத எப்படிச் சொல்லிக் கொடுக்கறதுன்னு தேடுறேன்!"
"எல், ஐ, ஜி, ஹெச், டி. லைட். அவ்வளவு தான்!"
"நீங்க சொல்றது ஸ்பெல்லிங். ஆனா, லைட்னா ஒளி, வெளிச்சம். இத எப்படிச் சொல்லிக் கொடுக்கறது?"
அதே ஆசிரியருக்கும் ஒரு குழந்தையின் தாயாருக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு,
"இருபது நாள் முடிஞ்சு போச்சு. என் குழந்தையால எதுவுமே கத்துக்க முடியல. நாம தோத்துப் போயிட்டோம்".
"இருபது நாள் இன்னும் முடியல. இன்னமும் ஒரு மணி நேரம் இருக்கே!"
"இருபது நாள் ஒண்ணும் முடியல. ஒரு மணி நேரத்தில என்ன செய்ய முடியும்?"
"கத்துக்கறதுங்கறது நெருப்பு பத்திக்கறது மாதிரி. அதுக்கு ஒரு நொடி கூடப் போதும். நான் மறுபடியும் முயற்சி பண்ணிப் பாக்கறேன். ப்ளீஸ்!"
இப்படியான ஆர்வம் கொண்ட ஆசிரியர் மற்றும் பிடிவாதம் கொண்ட குழந்தை இடையிலான உறவையும், கல்வியையும் பேசிய அந்தத் திரைப்படம் இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியாக!
***
(கட்டுரையாளர் ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: teacherselvam@gmail.com