வியர்வையிலே நனைகிறோம்,
குளிரிலே உறைகிறோம்!
ஸ்மார்ட் கிளாஸ் வந்ததும்
கொண்டாட்டம் ஆச்சு;
பள்ளியில போதுமான கட்டடம் இல்லாததால
எங்க பாடு திண்டாட்டமாப் போச்சு!
ஆர்டர் வந்து ஆண்டுகள் உருண்டு போச்சு;
எங்க பள்ளி கட்டட வளர்ச்சி மட்டும் பாதியில நின்னே போச்சு!
வெள்ளை தாளில் வெளிவந்த செய்திகள் எல்லாம் - பாவம்
வண்ண தாள்களிடம் சரணடைந்து விட்டன!
இலவசச் சீருடையும்
இதற்குமேல் தாங்க முடியாது என்பதுபோல,
தரையின் உராய்வு தாங்காது
விரிசல் விட ஆரம்பித்துவிட்டது!
தரமான கட்டடம் வருமுன்னு
தரையில உக்காந்து படிச்சோம்;
ஆனா இப்போ,
கட்டாந்தரையே நிரந்தரமாயிருமோனு தவிக்கிறோம்!
அப்பப்ப பாம்பும் பூரானும் பள்ளிக்கூடம் வருகுது;
பறவைகளும் சேர்ந்தே பாடங்கள் கற்குது!
மரத்தடிதான் எங்கள் வகுப்பறை!
பூமித்தாய் மடிதான் எங்களுக்கு இருக்கை!
எங்களுக்கு எல்லாமே மரத்தடிதான்!
காலை வகுப்பறையும் மரத்தடிதான்;
மதிய உணவுக்கூடமும் மரத்தடிதான்;
மாலை விளையாட்டுத் திடலும் மரத்தடிதான்;
நாங்கள் ஓய்வெடுக்கும் இடமும் மரத்தடிதான்!
பகலிலே எங்கள் அறிவுக் கண் ஒளிர,
மரமும் எங்களுக்காய் உழைக்கிறது!
ஆனால் இந்த பாழாய்ப் போன ???? மட்டும்,
இதை கண்டுகொள்ள மறுக்கிறது!
என்று மாறும் இந்த நிலை?
முடியட்டும் வேலை;
விடியட்டும் நாளை!
(இக்கவிதை அடிப்படைக் கட்டட வசதி இல்லாத அனைத்துப் பள்ளிகளுக்கும் சமர்ப்பணம்).
***
(கவிஞர் விருதுநகர் மாவட்டம் தமிழ்ப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]