‘பதிலி எழுத்தர்கள்’ - இப்படிச் சொன்னால் சட்டென யாருக்கும் இந்த வார்த்தையின் அர்த்தமோ, வீரியமோ விளங்கிவிடாது. மாறாக, ‘ஸ்கிரைப்’ என ஆங்கிலத்தில் சொன்னால்தான் இந்த வார்த்தையின் வீரியம் விளங்கும் நம்மில் சிலருக்கு. பார்வையற்றவர்களின் பள்ளி துவங்கி, பொதுவான போட்டித் தேர்வுகள் வரை நமக்கு உற்ற துணையாய் வருபவர்கள் இந்தப் பதிலி எழுத்தர்கள். பதிலி எழுத்தர்களின் உதவியுடன் தேர்வு எழுதிய ஒவ்வொரு பார்வையற்றவரின் அனுபவத்தையும் கொண்டு, ஒரு ஸ்கிரைப்பீடியாவே எழுதிவிடலாம். அந்த அளவிற்கு பார்வையற்றவர்களிடையே பதிலி எழுத்தர்கள் குறித்தான அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
நண்பர் ஒருவர், வங்கித் தேர்விற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மதுரையில் இருந்து பேருந்தில் தன் பயணத்தைத் துவங்கியிருந்தார். இரவு 12 மணி; நண்பரின் அலைபேசி அலருகிறது. நண்பர் அலைபேசியை எடுத்து தன் காதருகே கொண்டு சென்று, யார் இந்நேரத்தில் நமக்கு அழைப்பெடுக்கிறார்கள் எனப் பார்க்கிறார். மறுநாள் வங்கித் தேர்விற்கு வருவதாகச் சொல்லி இருந்த பதிலி எழுத்தர்தான் அந்த அழைப்பை ஏற்படுத்தி இருந்தார். நண்பரும் அலைபேசியை எடுத்து, அந்தப் பதிலி எழுத்தரிடம் விஷயத்தைக் கேட்டார். அந்தப் பதிலி எழுத்தரின் உறவினர் யாரோ இறந்துவிட்டதாகவும், தன்னால் தேர்வு எழுத வர இயலாது எனவும், ஆகையால் வேறொரு பதிலி எழுத்தரை ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு, தன் மன்னிப்பையும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அவர். நண்பரும் அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சென்னையில் வந்து இறங்கிவிட்டார். அன்று அவருக்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்கவில்லை. நான் மேலே குறிப்பிட்ட சம்பவம் ஒரு சாம்பில்தான், இதுபோன்ற பல அசௌகரியத் தருணங்களை ஒவ்வொரு பார்வையற்றவரும் கடந்து வந்திருக்கக் கூடும்.
இம்மாதிரியான அசௌகரியத் தருணங்களை தவிர்க்கவும், ஒரு தரமான பதிலி எழுத்தரைத் தேடவும், நம் திறன்பேசிக்குள்ளேயே ஒரு செயலி இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கெல்லாம் தற்போது மொத்தமாய் விடை சொல்லி இருக்கிறார்கள், பெங்களூரைச் சேர்ந்த இரண்டு ஐ.டி. வாலிபர்கள். ஒருவர் ஸ்ரீகாந்த், மற்றொருவர் ஸ்ரீராம். இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் செயலிதான் ‘Scribe Finder’.
கடந்த நவம்பரில்தான் ஆண்டிராய்டு உலகத்திற்குள் குதித்திருக்கிறது இந்தச் செயலி. செயலியின் அணுகல் தன்மை வடிவமைப்பும், எளிமையான பயனர் இடைமுகமுமே (User Interface) நம்மை இந்தச் செயலிக்குள் சட்டென ஈர்த்துவிடுகிறது. இந்தச் செயலியின் நேர்த்தியான வடிவமைப்பை பயன்படுத்திப் பார்க்கையில், அந்த வாலிபர்களின் உழைப்பை நிச்சயம் நம் பார்வையற்ற சமூகம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வாலிபர்களின் உழைப்பில் உருவான இந்தச் செயலியில், நமக்கு ஏற்றாற்போன்ற வசதிகள் பல வரிசையாய் கொட்டிக் கிடக்கின்றன.
நான் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் துல்லியமாய் கிடைக்க வேண்டுமானால், நம் பார்வையற்ற சமூகம் இங்கே ஒரு விடையத்தைச் செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் சந்திக்கும் தன்னார்வலர்கள், உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை இந்தச் செயலியில் உறுப்பினராக இணைத்து விடுங்கள். இந்தச் செயலியில் நாமும், தன்னார்வலர்களும் எவ்வாறு உறுப்பினர் ஆகவேண்டும் என்பது குறித்து பின்னால் பார்க்கலாம்.
ஒரு தரமான பதிலி எழுத்தரைத் தேடி, தேர்வை எழுதி முடிக்க, அந்தத் தேர்வுக்கு நன்றாகப் படித்திருக்க வேண்டும் இல்லையா? அதற்கும் இந்த செயலிக்குள்ளேயே பதில் வைத்திருக்கிறார்கள் இவர்கள்! உங்கள் தேர்வுக்கு வேண்டிய பாடத் தொகுப்புகளையும் இந்தச் செயலிக்குள்ளேயே தர முயற்சித்திருக்கிறார்கள் இந்த வாலிபர்கள். நீங்கள் உங்களிடம் உள்ள பாடத் தொகுப்புகளையும் இந்தச் செயலிக்குள் தரவேற்றலாம். அதற்கேற்ற ஆப்ஷன்களையும் இந்த செயலிக்குள்ளேயே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
செயலியை எப்படிப் பயன்படுத்துவது?
முதலில் உங்கள் ஆண்டிராய்டு கைபேசியின் பிரத்தியேக ஆப் ஸ்டோருக்கு சென்று, ‘Scribe Finder’ என தட்டச்சவோ அல்லது உங்கள் குரலில் இந்தச் செயலியின் பெயரைச் சொல்லியோ அல்லது இந்தத் தொடுப்பை பயன்படுத்தியோ (செயலியை நிறுவ) செயலியை உங்கள் கைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். செயலியைக் கைபேசியில் நிறுவிய பின், அந்தச் செயலியை கண்டறிந்து அதனுள்ளே செல்லுங்கள். அங்கு உங்களுக்கு 2 தெரிவுகள் காட்டப்படும். அவை, 1. நான் பார்வையற்றவன் (I’m Needy/Visually Impaired) மற்றும் 2. நான் தன்னார்வலர் (I’m Volunteer). இதற்கு நம்மவர்கள், ‘நான் பார்வையற்றவன்’ என்ற முதல் தெரிவை தேர்வு செய்து, உங்களது விவரங்களைக் கொடுத்து புதிய கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொண்டால், செயலியில் உள் நுழையும் பணி முடிந்தது. உங்கள் தன்னார்வலர்களும் இந்தச் செயலியில் உறுப்பினராக வேண்டுமெனில், ‘நான் தன்னார்வலர்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உறுப்பினர் ஆகிக்கொள்ளலாம்.
நீங்கள் செயலிக்குள் நுழைந்ததும், திரையில் மெனுவை தவிர மொத்தம் 4 ஆப்ஷன்கள் மட்டுமே காட்டப்படும். அவற்றில் முதலாவதாக இருப்பது, ‘உங்கள் பதிலி எழுத்தரைத் தேடுங்கள்’ (Search for Scribe). அதற்கு அடுத்ததாக முறையே, ‘பாடத் தொகுப்புகள்’ (Study Materials), ‘பாடத் தொகுப்புகளைத் தரவேற்றுக’ (Upload Notes), ‘முந்தைய பாடத் தரவேற்றல்களை காண்க’ (View Uploads). இந்த 4 எளிய ஆப்ஷன்களும்தான் இந்தச் செயலியை அலங்கரிக்கின்றன.
நான் இங்கே இந்தச் செயலியின் முதலாவது ஆப்ஷனை மட்டும் விளக்குவது உசிதம் என நினைக்கிறேன்; மற்ற ஆப்ஷன்களை வாசகர்களே பயன்படுத்தி பார்த்துவிட்டு, சந்தேகங்களை பின்னூட்ட பகுதியில் வினவலாம். ‘Search for Scribes’ என்ற அந்த முதலாவது ஆப்ஷனை கிளிக் செய்தால், மொத்தம் 5 ஐகான்கள் திரையில் தோன்றும். அதில் முதலாவது, உங்கள் அருகில் உள்ள பதிலி எழுத்தரை தேடக்கூடிய ‘Near Me’ ஆப்ஷன். அப்படி உங்களுக்கு அருகில் எந்தப் பதிலி எழுத்தரும் இல்லை என்ற சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு, ‘மாநிலத்தைத் தேர்வு செய்’ (Select State), ‘மாவட்டத்தைத் தேர்வு செய்’ (Select District), ‘நகரத்தைத் தேர்வு செய்’ (Select City) மற்றும் இறுதியாகத் ‘தேடுக’ (Search) பொத்தானும் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆப்ஷன்களைக் கொண்டு, பதிலி எழுத்தரை நீங்கள் மிக எளிமையாக தேடிக்கொள்ளலாம்.
இந்தப் பதிலி எழுத்தரைத் தேடுக பகுதியிலுள்ள ஆப்ஷன்களில், ‘Near Me’ ஆப்ஷன் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் ஓரளவிற்கு வேலை செய்கிறது. மற்ற மாவட்டங்களில் ‘Near Me’ ஆப்ஷன் தரமாக வேலை செய்கிறதா என்பதை வாசகர்கள்தான் பயன்படுத்திப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளைப் பகிரவேண்டும்.
எப்படி ஒரு பதிலி எழுத்தரைத் தேடுவது?
நான் மேலே சொன்ன ‘Near Me’ ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பதிலி எழுத்தர்களை காண்பிக்கும்; அருகாமையில் யாரும் இல்லை எனில், ‘வேறு இடத்தைக் கொண்டு தேடுக’ என்ற செய்தி நம் திரையில் தோன்றும். எனவே, நீங்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள பதிலி எழுத்தர்களைத் தேடத் தயாராகிக்கொள்ள வேண்டும். ‘Near Me’ ஆப்ஷனுக்கு கீழ் உள்ள, ‘மாநிலத்தைத் தேர்வு செய்’, ‘மாவட்டத்தைத் தேர்வு செய்’, ‘நகரத்தைத் தேர்வு செய்’ போன்ற ஆப்ஷன்களில் உங்களுக்கு வேண்டியவற்றைத் தேர்வு செய்து, ‘தேடுக’ பொத்தானை கிளிக் செய்தால் பதிலி எழுத்தர்கள் உங்கள் திறன்பேசித் திரையில் வரிசையாக மிளிர்வார்கள்! அந்தப் பதிலி எழுத்தர் பட்டியலில் ஏதாவது ஒரு பதிலி எழுத்தரின் பெயரை நீங்கள் கிளிக் செய்தால், அவர் குறித்த விவரங்கள் திரையில் தோன்றும். நீங்கள் அவரது சுய விவரத்தைப் பார்த்து, உங்களுக்கு அவர் தேர்வு எழுத ஏற்றவரெனில், அவருடன் மின்னஞ்சல் வாயிலாகவோ, அலைபேசியிலோ தொடர்புகொண்டு பேசலாம். நான் மேலே சொன்ன மாநிலம், மாவட்டம், நகரம் போன்றவற்றைத் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷன்கள் டிராப் டவுன் பாக்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது இச்செயலி குறித்து ஒரளவிற்கேனும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இதே மாதிரியான பதிலி எழுத்தர்களைத் தேடும் செயலி ஒன்று நம் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு உதயமாகி இருந்தது. ஆனால், தற்பொழுது அந்தச் செயலி குறித்தான பயன்பாடுகள் நம்மவர்களிடையே பெரிதாகத் தென்படவில்லை. காரணம், அவர்களுக்கென்று ஒரு தனியான நேவிகேஷன் முறையை அவர்களது ஆப் டெவலப்பர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அந்தத் தனித்துவம்தான் அவர்களின் செயலியை கொஞ்சம் நம்மவர்களிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது. ஆனால், ‘Scribe Finder’ அப்படிப்பட்ட செயலி இல்லை என்பதை நீங்கள் இந்தச் செயலிக்குள் நுழைகையில் உணர்வீர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தற்பொழுது, தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தச் செயலியில் உறுப்பினர் ஆகி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. பதிலி எழுத்தர்கள் சென்னை துவங்கி, தமிழகத்தின் தென்கோடி முனைவரை செயலிக்குள் பரவிக் கிடக்கிறார்கள். போட்டித் தேர்வுகள் அதிகமாகிவிட்ட இக்காலகட்டத்தில் இதுபோன்ற செயலிகளும் நம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. வாசகர்களே! நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தன்னார்வலர்களையும் இச்செயலியில் இணைக்கத் தயார்தானே?
***
தொடர்புக்கு: [email protected]

- உங்களுக்கு மிக அருகாமையில் உள்ள பதிலி எழுத்தரை நொடிப்பொழுதில் தேடலாம்.
- மாநிலம், மாவட்டம், நகரம் இவற்றைக் கொண்டும் உங்கள் பதிலி எழுத்தரைத் தேடலாம்.
- நீங்கள் தேடிய பதிலி எழுத்தர் உங்களுக்குப் பிடித்துவிட்டால், நேரடியாக அவருக்கு மின்னஞ்சலோ, தொலைபேசவோ செய்யலாம்.
- இது தவிர, ஒவ்வொரு பதிலி எழுத்தரின் துல்லியமான விவரங்களும் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்தப் பதிலி எழுத்தரின் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், அவர் எந்தெந்த மொழிகளில் உங்களுக்குத் தேர்வு எழுதக் கூடும் போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.