16 நவம்பர் 2018 - நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வில் மறக்க முடியாத துயர நாளாக மாறிவிட்டது. கஜாப் புயலின் கோர தாண்டவம் நான்கு மாவட்ட மக்களை, அவர்களின் உழைப்பை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது.
பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்து இருளில் மூழ்கியதோடல்லாமல், மரங்களின்றி வெட்டாந்தரையாக மாறின டெல்டா மாவட்டங்கள். அந்தப் பகுதியின் முக்கியத் தொழிலான தென்னை விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு சென்றிருக்கிறது கஜா!
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அரசின் பல்வேறு துறைகளும், தன்னார்வக் குழுக்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றிச் சுழன்று நிவாரணப் பணியாற்றிக் கொண்டிருக்க, தனது 115289 மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து எந்தவிதப் பதட்டமோ, பரிவோ இன்றி மெத்தனமாக இயங்கியது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.
உணவு, உறைவிடம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகிவிட்ட மக்களுக்கான நிவாரணங்கள் பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட, கூட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு பெற இயலாத மாற்றுத்திறனாளிகளின் அல்லல் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் மெத்தனம் குறித்தும், ‘டிசம்பர் 3’ இயக்கம் தனது வேதனையை ஓர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியது.
அதன் பிறகே, தனது அரிதுயில் களைத்த ஆணையரகம், கஜாப் புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தொடர்புடைய மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடம் அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறது. கஜாப் புயலின் தாக்குதலுக்குள்ளான மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள், மறுவாழ்வு இல்லங்களும் வெகுவாகப் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், ஆணையரகத்தின் சில மூத்த அதிகாரிகளுக்கு, மண்டல அலுவலர்கள் (Zonal Officers) என்ற பெயரில் மாவட்ட வாரியாகச் செயல்படுத்தப்படும் பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் குறித்துக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள்கூட பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை!
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கிட வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் என பல துறைகள் இருக்கின்றன. ஆனால், அவர்களின் கைபிடித்து, “கவலை வேண்டாம், நம்பிக்கை இழக்காதீர்கள்” என்று தேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இருக்கிறது.
ஆகவே, அறிக்கைகள் கேட்பதை விடுத்து, ‘களத்திற்கு வாருங்கள், ஆணையர் அவர்களே!’
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”